‘மகாபாரதம்’ படம் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலியின் கனவுப் படமாகும். இந்த மிகப் பெரிய படைப்பை உருவாக்க குறைந்தது 6 முதல் 8 ஆண்டுகள் நேரம் செலவழித்து, நமது பாரம்பரிய இந்திய இதிகாசங்களின் முக்கியத்துவத்தை புதிய தலைமுறைக்கும், உலகளாவிய ரசிகர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே அவரது நோக்கமாகும்.

சமீபத்தில், இந்தப் படத்தில் நடிகர் நானி உறுதியாக இடம்பெறுவார் என்று எஸ்.எஸ். ராஜமவுலி அறிவித்தார். இதன் பிறகு, அவரது தந்தையும் பிரபல எழுத்தாளருமான விஜயேந்திர பிரசாத், ‘மகாபாரதம்’ படம் மூன்று பாகங்களாக உருவாக்கப்படும் என்றும், தற்போது அதன் கதை வேலைகள் நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவித்தார்.
மேலும், ‘மகாபாரதம்’ ராஜமவுலியின் கடைசி படமாக இருக்கும் என்ற தகவலும் இணையத்தில் பரவுகிறது தற்போது ராஜமவுலி, நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து தற்காலிகமாக ‘எஸ்.எஸ்.எம்.பி 29’ என அழைக்கப்படும் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார்.