Saturday, January 25, 2025

காஞ்சனா 4ல் இணைகிறாரா பிரபல பாலிவுட் நடிகையான நோரா பதேகி? தீயாய் பரவும் தகவல்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடன இயக்குநரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான பேய் திரைப்படங்கள் காஞ்சனா என்ற பெயரில் மிகவும் பிரபலமானவை. இந்த தொடர் இதுவரை மூன்று பாகங்களாக வெளியிடப்பட்டு பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ஏற்கனவே காஞ்சனா 4 படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் முடிந்துவிட்டன. இதற்கிடையில், லாரன்ஸ் மற்ற சில படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி‌‌ வருகிறார்.

அதன்படி, அவர் நடிக்க இருந்த பென்ஸ் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு காஞ்சனா 4 படத்தின் படப்பிடிப்பை லாரன்ஸ் தொடங்கியுள்ளார். இதைத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் கோல்ட் மைன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மணி ஷா உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த படம் சுமார் ரூ. 100 கோடி செலவில் உருவாகிறது. இதில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளராம். இந்நிலையில், மற்றொரு முக்கிய கதாபாத்திரத்திற்காக பாலிவுட் நடிகை நோரா பதேகி தற்போது தேர்வு செய்யப்பட்டுற்றதாக கூறப்படுகிறது. பாலிவுட்டில் பல படங்களில் நடித்து பிரபலமான இவர், கவர்ச்சிகரமான பாடல்களில் நடனமாடியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News