கடந்த ஆண்டில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த “ஜெயிலர்” திரைப்படம் வெளியாகி உலகளவில் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக ஜெயிலர் 2ஆம் பாகத்திற்கான முன் பணிகள் நடைப்பெற்று வருகின்றன.
ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த நடிகர், நடிகைகள் இரண்டாம் பாகத்திலும் தொடர உள்ளனர். மேலும் கூடுதலாக, கே.ஜி.எப் படத்தின் மூலம் பிரபலமான ஸ்ரீநிதி ஷெட்டி ஜெயிலர் 2 படத்தில் இணைந்துள்ளார் என கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே தமிழில் “கோப்ரா” படத்தின் மூலம் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ரஜினி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “கூலி” படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்திற்குள் முடிவடையும் என கூறப்படுகிறது. அதன் பின்னர், மார்ச் மாதத்தில் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.