Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

ஜூனியர் என்டிஆர்-ஐ நெல்சன் இயக்குகிறாரா? இது புதுசா இருக்கே…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவான ‘ஜெயிலர்’ படம் வெளியானது. அதன் வெற்றிக்கு பிறகு, நெல்சன் தற்போது ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கத் தயாராகி வருவதாக செய்திகள் கூறுகின்றன.

இந்நேரத்தில், இசையமைப்பாளர் அனிருத்தின் மூலமாக, தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் இடம் நெல்சன் ஒரு கதை கூறியதாகவும், விரைவில் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், சமீபத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்த ‘தேவரா’ படத்தைத் தொடர்ந்து, நெல்சன் இயக்கும் புதிய படத்துக்கும் அனிருத்தே இசையமைக்க உள்ளார் என கூறப்படுகிறது. இதனால், ஒருவேளை இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அடுத்ததாக நெல்சன் ‘ஜெயிலர்-2’ படத்தை இயக்குவாரா அல்லது ஜூனியர் என்டிஆரை இயக்குவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அதேபோல் சமீபத்தில் ஜுனியர் என்டிஆர் அளித்த பேட்டியில் எனக்கு இயக்குனர் வெற்றிமாறன் மிகவும் பிடிக்கும் என்றும் அவருடன் இணைந்து படம் செய்ய விருப்பம் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News