கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் “டாக்சிக்” என்ற படத்தில், கதாநாயகனாக யாஷ் நடிக்கிறார். இந்த படத்தில் மற்ற நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய முழு விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில், நடிகர் அக்ஷய் ஓபராய் ஒரு பேட்டியில் கூறியதாவது, “நான் தற்போது ராக்கிங் ஸ்டார் யாஷ் உடன் ‘டாக்சிக்’ படத்தில் நடிக்கிறேன். நயன்தாராவும் இப்படத்தின் முக்கியமான பகுதியாக இருக்கிறார். படக்குழுவினர் இதுவரை படம் குறித்து எந்த தகவலையும் வெளியிடாததால், நான் அதிகமாக பேச விரும்பவில்லை என்றார்.
மேலும், “டாக்சிக்” படத்தில் கியாரா அத்வானி, தாரா சுதாரியா மற்றும் சுருதிஹாசன் நடித்துள்ளனர். இந்த படம் போதைப்பொருள் விவகாரத்தை மையமாகக் கொண்டு மிக அதிக பொருட்செலவில் உருவாகி வருகிறது” என அவர் தெரிவித்தார்.