லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா நடித்துள்ளார். இதேபோன்று, நடிகர் தனுஷுடன் இணைந்து ‘குபேரா’ என்ற படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.

நாகார்ஜூனாவின் 100வது படத்தை யார் இயக்கப்போகிறார்கள் என்பது குறித்து நீண்ட காலமாக ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், தற்போது ‘நித்தம் ஒரு வானம்’ படத்தை இயக்கிய தமிழ் இயக்குனரான ரா. கார்த்தி, நாகார்ஜூனாவின் 100வது படத்தை இயக்கவுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதனால், இந்த படத்தின் மீது தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே உள்ள ஆர்வம் அதிகரித்து வருகிறது.

இதற்கு முன்னர் தனுஷ், சூர்யா, கார்த்தி ஆகியோர் தெலுங்கு இயக்குநர்களின் படங்களில் நடித்த நிலையில், இப்போது ஒரு தெலுங்கு நடிகர் தனது 100வது படத்துக்காக தமிழ் இயக்குநரை தேர்ந்தெடுத்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.