Tuesday, January 21, 2025

ரீமேக் ஆகிறதா ‘மார்கோ’ ? உன்னி முகுந்தன் கதாபாத்திரத்தில் விக்ரம் நடிக்கிறாரா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம், சமீபத்தில் வெளியான தங்கலான் படத்தில் நடித்தார். ரூ.100 கோடிக்குமேல் வசூலித்த இந்தப் படம் அவரை மேலும் உயர்த்தியது. இதைத் தொடர்ந்து விக்ரம் நடித்து வரும் படம் வீர தீர சூரன்.

விக்ரமின் 62வது திரைப்படமான இதில், துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துவருகிறார். இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது, ஆனால் முதலில் 2வது பாகம் திரைக்கு வர உள்ளது.

அதே நேரத்தில், மலையாளத்தில் ஹனீப் அடேனி இயக்கத்தில் உன்னி முகுந்தன் நடித்த மார்கோ படத்தின் தமிழ் ரீமேக்கில் விக்ரம் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு, மார்கோ 2 திரைப்படத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் முதல் பாகத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளார் என்பதும் உறுதியாகியுள்ளது.மார்கோ படத்தில் உன்னி முகுந்தனுடன் யுக்தி தரேஜா, சித்திக், ஜெகதீஷ், அபிமன்யூ உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தமிழ் ரீமேக் பற்றிய தகவல் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

- Advertisement -

Read more

Local News