தனுஷ் தற்போது ஹிந்தியில் ‘தேரே இஸ்க் மெயின்’ படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து ‘இட்லி கடை, குபேரா’ படங்களின் மீதமுள்ள படப்பிடிப்புகளில் நடிக்கவுள்ளார். அதன் பிறகு, தமிழில் ‘போர் தொழில்’ படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடிக்கவுள்ளார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடிக்கவுள்ளார். மேலும், இதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் ஜெயராம் ஒப்பந்தமாகியுள்ளதாகக் கூறுகின்றனர்.
இந்த படத்தின் தனுஷும் ஜெயராமும் முதல் முறையாக இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.