இந்தி திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்குபவர் ஷாருக்கான். அவரது நடிப்பில் வெளியான பதான் மற்றும் ஜவான் ஆகிய இரு திரைப்படங்களும் மாபெரும் வெற்றியடைந்தன. இந்த இரண்டு படங்களும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்ததோடு மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் இருந்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. தற்போது, அவர் கிங் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரது மகளான சுஹானா கானும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த சூழலில், நடிகர் ஷாருக்கான் தென்னிந்திய இயக்குனர் அட்லீயுடன் இணைந்ததற்கு பிறகு, மீண்டும் ஒரு தென்னிந்திய இயக்குனருடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தென்னிந்திய படங்கள் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இதன் விளைவாக, தென்னிந்திய இயக்குனர்களுக்கு இந்தியில் புதிய வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
இந்தப் பின்னணியில், புஷ்பா படத்தை இயக்கிய சுகுமாரின் புதிய படத்தில் ஷாருக்கான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டணி உறுதியானால், இதில் ஷாருக்கான் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.