2023ம் ஆண்டு வெளியான ‘பாலகம்’ திரைப்படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு, நகைச்சுவை நடிகராக இருந்து இயக்குனராக மாறிய வேணு யெல்டாண்டி, தனது இரண்டாவது இயக்கமாக ‘எல்லம்மா’ படத்தை இயக்க உள்ளார்.

இந்தப் படத்தில் நடிக்கும் கதாநாயகன் மற்றும் கதாநாயகியைப் பற்றி இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில், தற்போது வந்துள்ள தகவல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. ஆரம்பத்தில், நானி இந்தப் படத்தின் கதாநாயகனாக நடிப்பார் என கூறப்பட்டாலும், தற்போது நிதின் இந்த வேடத்தில் நடிக்கவுள்ளார் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில். சாய் பல்லவி நடிப்பார் என ஆரம்பத்தில் தகவல்கள் வெளியாகின, தற்போது கீர்த்தி சுரேஷ் இப்படத்தின் கதாநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குனர் வேணு யெல்டாண்டி அவருக்கு கதையின் ஸ்கிரிப்டை விவரித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.