தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் மே 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து, ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் தனது 45வது திரைப்படத்தில் சூர்யா நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த படத்தில் திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சூர்யாவின் 46வது திரைப்படத்தை ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் பணியாற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இந்தப் படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதுகுறித்து இன்னும் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதற்கு முன்பு 2018ஆம் ஆண்டு வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்தில் சூர்யா மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.