தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் பல்வேறு படங்களில் கலக்கியவர் ஜி.வி. பிரகாஷ் குமார். சமீபத்தில் இவர் நடித்த ‘கிங்ஸ்டன்’ திரைப்படம் திரைக்கு வந்தது. கமல் பிரகாஷ் எழுதி இயக்கிய இப்படத்தில் திவ்யபாரதி கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

அதன் பின்னர், ஜி.வி. பிரகாஷ் ‘இடிமுழக்கம்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். அந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், அவர் நடிக்க உள்ள புதிய திரைப்படம் குறித்து ஒரு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதாவது, அறிமுக இயக்குநராக மாரியப்பன் சின்னா இயக்கும் புதிய திரைப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை ஏ.கே. பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. இதில் கதாநாயகியாக காயடு லோஹர் நடிக்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்துக்கான புதிய அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.