தெலுங்கில் வெளியான ‘சலார்’ திரைப்படத்தில் பிரித்விராஜின் இளம்வயது கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் கவனத்தை பெற்றவர் கார்த்திகேயா தேவ்.

அதன் பின்னர் அவர் ‘எம்புரான்’ படத்தில் நடித்ததுடன், சமீபத்தில் அஜித் குமார் நடித்த தமிழ்த் திரைப்படமான ‘குட் பேட் அக்லி’யில், அஜித்தின் மகனாக நடித்திருந்தார். இதன் மூலம் தமிழ்த் திரைப்படத்துறையிலும் அறிமுகமானார்.
இந்நிலையில், ‘குட் பேட் அக்லி’ படம் வெளியாகும் முன்னரே, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘கூலி’ திரைப்படத்தில், கார்த்திகேயா தேவ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.