‘தொட்டான் சிணுங்கி’ மற்றும் ‘தூண்டில்’ ஆகிய தமிழ் படங்களை இயக்கியவர் கே.எஸ். அதியமான். அதன் பிறகு அவர் ஹிந்தி படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தினார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவர் இயக்குனராக எந்தப் படத்தையும் இயக்காமல் இருந்தார்.

இப்போது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குனராக திரும்பியுள்ள அவர், தமிழில் புதிய ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதில் ரேவதி, விதார்த், லிஜோ மொல் ஜோஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை வி ஹவுஸ் நிறுவனம் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.