மலையாள திரைப்பட உலகில் வேகமாக முன்னேறி வரும் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் உன்னி முகுந்தன். சமீபத்தில் அவர் நடித்த ‘மார்க்கோ’ திரைப்படம் மலையாளத்தில் வெளியான பிறகு, உலகளவில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. தமிழ் திரைத்துறையில், ‘சீடன்’, ‘கருடன்’ போன்ற சில படங்களில் அவர் நடித்துள்ளார்.
தற்போது, உன்னி முகுந்தன் அளித்துள்ள ஒரு பேட்டியில், “தமிழ் திரைப்படத்துறையில் உள்ள அனைவரும் எனக்கு பிடித்தவர்கள். நான் தமிழ் திரைப்படங்களை பார்த்து வளர்ந்த ஒரு பையன். தமிழ் திரையுலகில் உள்ள ஒவ்வொருவரையும், அவர்களின் தனித்துவமான காரணங்களுக்காக நேசிக்கிறேன்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000158529-819x1024.jpg)
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000158528-828x1024.jpg)
அதே நேரத்தில், குறிப்பாக கமல் ஹாசன் மற்றும் விக்ரம் இருவரையும் சிறப்பாக பாராட்டினார். “ஒரு திரைப்படத்திற்காக முழுமையாக மாறிக்கொள்ளும் அவர்களின் உழைப்பும், அர்ப்பணிப்பும் எனக்கு மிகுந்த முன்னுதாரணமாக இருக்கின்றன.” மேலும், விக்ரம் உடன் ஒரு திரைப்படம் செய்ய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.