Touring Talkies
100% Cinema

Saturday, October 25, 2025

Touring Talkies

புதுமுக இயக்குனர் அஸ்டின் இயக்கத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாரா மோகன்லால்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘எல்2: எம்புரான்’, ‘ஹிரூதயபூர்வம்’ மற்றும் ‘தொடரும்’ ஆகியவை படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. இதனைத் தொடர்ந்து, தெலுங்கு மொழியில் அவர் நடித்துள்ள ‘விருஷபா’ திரைப்படம் வருகிற நவம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ளது.

மற்றொரு புறம், இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ‘திரிஷ்யம் 3’ மற்றும் ‘பேட்ரியாட்’ உள்ளிட்ட பல படங்களில் தற்போது நடித்து வருகிறார் மோகன்லால். இதேபோல், மோகன்லால் நடிக்கும் அவரது 365வது திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஆஸ்டின் டான் தாமஸ் இயக்கவுள்ளார்.

இவர் 2020 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான ‘அஞ்சாம் பாதிரா’வில் முதன்மை துணை இயக்குனராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர். தயாரிப்பாளர் ஆசிக் உஸ்மான் இந்த படத்தைத் தயாரிக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மோகன்லால் இந்த படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடுபுழா, சபரிமலை மற்றும் மும்பை போன்ற இடங்களில் நடைபெற உள்ளது. வருகிற டிசம்பர் 5ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது.

- Advertisement -

Read more

Local News