தமிழில் தொடர்ந்து வெற்றியைச் சாதித்து வரும் ஹரிஷ் கல்யாண், ‘பார்க்கிங்’ மற்றும் ‘லப்பர் பந்து’ ஆகிய இரு வெற்றிப் படங்களை தந்துவிட்டார். தற்போது அவரது கைவசம் ‘நூறு கோடி வானவில்’ மற்றும் ‘டீசல்’ போன்ற படங்கள் உள்ளன. இவற்றைத் தவிர, ‘லிப்ட்’ படத்தின் இயக்குநர் வினித் வர பிரசாத் இயக்கும் புதிய படத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படத்தில் மலையாள நடிகர் செம்பியான் வினோத் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர் என தகவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன.
இப்போது, இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்க ‘ஸ்டார்’ பட நடிகை பிரீத்தி முகுந்தன் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், சமீபத்தில் இவர் நடனமாடிய ‛ஆச கூட’ என்ற ஆல்பம் பாடல் யூடியூப்பில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.