இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் நடிகர், நடிகைகள் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இடையிடையே பலரும் இதில் நடிக்கிறார்கள் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் மட்டுமே பரவி வருகின்றன. சமீபத்தில், இப்படத்தில் நடிகை வித்யா பாலன் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

தற்போது அதனைத் தொடர்ந்து மலையாள நடிகர் பகத் பாசில் இப்படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்திலும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போது அவர்கள் மீண்டும் ஜெயிலர் 2 படத்தில் ஒன்றாக இணைகிறார்களா இல்லையா என்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

