கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகிய ‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் பெரும் புகழ் பெற்றவர் நடிகை மமிதா பைஜூ. அதன்பின் தமிழில், தற்போது விஜய், சூர்யா ஆகிய முன்னணி நடிகர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து நடித்த ‘டியூட்’ திரைப்படமும் தற்போது வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் சமீபத்திய ‘டியூட்’ படப் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மமிதாவிடம், “பிரேமலு 2” படத்தில் நீங்கள் நடிப்பீர்களா?” என்றும், “மிகப்பெரும் வெற்றிப் பெற்ற ‘லோகா’ படத்தின் அடுத்த பாகத்தில் நீங்கள் நடிப்பதாக கூறப்படுகிறது, இது உண்மையா?” எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த மமிதா பைஜூ, “லோகா படத்தின் அடுத்த பாகங்களில் நான் நடிப்பது பற்றிய எந்த தகவலும் இப்போது உறுதி செய்யப்படவில்லை. அதே சமயம், வரும் பாகங்களில் எனக்கு ஒரு கதாபாத்திரம் இருக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும் அதில் நடிப்பதில் நான் ஆர்வமாக இருக்கிறேன்” என்று தெரிவித்தார். மேலும், அவர் நடித்த வெற்றி படமான ‘பிரேமலு’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படுகிறதா என்பதையும், அதிலும் கதாநாயகியாக நடிப்பதற்கான அதிகாரப்பூர்வ தகவல் படத்தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து இன்னும் தான் எதுவும் பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.