தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக அறியப்படும் லோகேஷ் கனகராஜ், வெற்றிகரமான பல படங்களை இயக்கியுள்ளார். தற்போது தயாரிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். ஒரே நேரத்தில் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் பிஸியாக இருக்கும் லோகேஷ் கனகராஜ், தற்போது ஹீரோவாக அறிமுகமாக உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கும் புதிய படத்தில், லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த புதிய கதாபாத்திரத்திற்காக அவர் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சி எடுக்கத் தொடங்கியுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த தகவல், ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘ராக்கி’, ‘சானி காகிதம்’, ‘கேப்டன் மில்லர்’ போன்ற அதிரடி ஆக்ஷன் படங்களை இயக்கியவர் அருண் மாதேஸ்வரன். இவர் அடுத்ததாக தனுஷை வைத்து இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கையை மையமாக கொண்ட பயோபிக் படத்தை இயக்க உள்ளார். ஒருபுறம் ‘கூலி’ திரைப்படத்தின் கடைசிக்கடட் பணிகள் வேகமாக நடந்து வரும் வேளையில், மறுபுறம் லோகேஷ் கனகராஜ் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சி மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்க தகவலாக இருக்கிறது.