Touring Talkies
100% Cinema

Thursday, September 4, 2025

Touring Talkies

தெலுங்கு திரையுலகில் தயாரிப்பாளராக என்ட்ரி கொடுக்கிறாரா இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

முன்னணி இயக்குனரான கார்த்திக் சுப்பராஜ் தனது தனித்துவமான கதை சொல்லும் முறையாலும், புதுமையான முயற்சிகளாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியவர். இயக்குனராக மட்டுமின்றி, தனது ஸ்டோன் பென்ச் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் பல திரைப்படங்களையும், வெப் தொடர்களையும் தொடர்ந்து தயாரித்து வருகிறார்.

இப்போது அவர் தமிழ் மட்டுமின்றி, தெலுங்குத் திரைப்படங்களையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தனது ஸ்டோன் பென்ச் நிறுவனம் மூலம் மூன்று தெலுங்கு திரைப்படங்களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளராம். இதில் முதல் படமாக, ‘உப்பேனா’ திரைப்படம் மூலம் பிரபலமான இளம் நடிகர் வைஷ்ணவ் தேஜூ கதாநாயகனாக நடிக்கவிருக்கும் புதிய திரைப்படம் எனப்படுகிறது.

இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News