ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்தை அடுத்து தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் AA22XA6 படத்தை இயக்கி வருகிறார் அட்லி. பான் இந்தியா கதையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து மும்பையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அல்லு அர்ஜுனை தொடர்ந்து ‘கேஜிஎப்’ பட நாயகன் யாஷ் நடிப்பில் தனது அடுத்த படத்தை அட்லி இயக்கப் போவதாக ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. அந்த படத்தையும் தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை போலவே பிரமாண்ட பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக இயக்க திட்டமிட்டுள்ளாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இதுவரை இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் உறுதியற்ற தகவல்கள் தான கூறப்படுகிறது. தற்போது ‘ராமாயணா’ மற்றும் ‘டாக்ஸிக்’ படங்களில் யாஷ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.