ராயன் படத்திற்கு பிறகு, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை தனுஷ் இயக்கியுள்ளார். இது இன்னும் வெளியாவதற்குள், அடுத்ததாக இட்லி கடை என்ற படத்தை இயக்கி, அதில் அவர் கதாநாயகனாக நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தனுஷின் கைவசம் தற்போது பல படங்கள் உள்ளன. இதில் அடுத்ததாக எந்தப் படத்தில் நடிக்கவுள்ளார் என்பது சினிமா வட்டாரத்தில் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில், இட்லி கடை படப்பிடிப்பு முடிந்தவுடன், வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் போர் தொழில் படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்தில் துவங்கவுள்ளது. தற்போதைய நிலையில், விக்னேஷ் ராஜா இந்தப் படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளில் முழு கவனம் செலுத்தி வருகிறாராம்.