Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

புஷ்பா 2 படத்தில் ஓரங்கட்டப்பட்டாரா தேவி ஸ்ரீ பிரசாத்? ரசிகர்கள் அதிர்ச்சி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் நடித்திருக்கும் ‘புஷ்பா 2’ திரைப்படம் வரும் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது. 2021ல் வெளியான முதல் பாகத்தை விட, இந்த இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதற்கிடையில், ‘புஷ்பா 2’ படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பதில்லை என்ற செய்தி வெளியானது. அவருக்கு பதிலாக தமன் மற்றும் அஜனீஷ் லோகநாத் இசையமைத்து வருகிறார்கள் என கூறப்பட்டது. தமன், ஒரு இசை நிகழ்ச்சியில் “புஷ்பா 2 வேலைகள் காத்திருக்கிறது” என்று பேசியதால் அவர் பின்னணி இசையில் ஈடுபட்டு இருப்பது உறுதியாகியுள்ளது.

மேலும், கடந்த ஐந்து நாட்களாக ‘புஷ்பா 2’ பற்றிய எந்த சமூக வலைத்தள பதிவுகளையும் தேவி ஸ்ரீ பிரசாத் வெளியிடவில்லை. அதே நேரத்தில் அவர் இசையமைத்துள்ள ‘கங்குவா’ படத்தைக் குறித்து தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். ‘புஷ்பா 2’ படத்தில் ஒரு ‘கிளாமர்’ பாடலுக்கு நடிகை ஸ்ரீலீலா நடனம் ஆடுகிறார் என்ற அறிவிப்பையும் தேவி ஸ்ரீ எந்தவிதத்திலும் அக்கறையின்றி விட்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

Read more

Local News