Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

வெளிநாட்டில் படமாக்கப்படுகிறதா? டிமான்ட்டி காலனி 3 ? வெளியான சுவாரஸ்யமான அப்டேட்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில் உருவான டிமான்டி காலனி மற்றும் டிமான்டி காலனி 2 வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, படத்தின் மூன்றாவது பாகத்திற்கான வேலைகளை அஜய் ஞானமுத்து தொடங்கிவிட்டார்.

மூன்றாவது பாகத்தில் அருள்நிதி மீண்டும் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் கதாநாயகியாக நடிக்கவுள்ளவர் யார் என்பது இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. முதல் இரண்டு பாகங்களின் கதைக்களம் சென்னையை மையமாகக் கொண்டிருந்தது. ஆனால் மூன்றாவது பாகத்திற்கான கதைக்களத்தை வெளிநாட்டில் அமைக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக ஐரோப்பாவில் உள்ள மால்டா தீவுகளுக்கு அஜய் ஞானமுத்து சென்றுள்ளார். படப்பிடிப்பு 2025 ஆம் ஆண்டில் ஆரம்பித்து, அதே ஆண்டிலேயே படத்தை வெளியிடும் நோக்கில் இருக்கின்றனர். தமிழ்ப் படங்களை ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிடும் கோல்டுமைன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது. விரைவில் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News