‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்திற்கு பிறகு மகேஷ்பாபுவின் 29வது படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இந்தப் படத்தில் பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடிக்கிறார், மேலும் மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த மூவரைத் தவிர, இப்படத்தில் இன்னும் யார், யார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார்கள் என்பதைப் பற்றிய தகவல்கள் இதுவரை வெளியாவதில்லை. இந்நிலையில், தமிழ் நடிகர் விக்ரம் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்ற தகவல் டோலிவுட் வட்டாரங்களில் பரவி வருகிறது.