பிரபல பாலிவுட் நடிகரான ஹிருத்திக் ரோஷன் நடித்த ‘கிரிஷ்’ திரைப்படம் 2006ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹீரோ வகைப் படமாக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தின் தொடர்ச்சியாக அடுத்தடுத்த பாகங்களும் உருவாக்கப்பட்டன. இதன் மூன்றாவது பாகமான ‘கிரிஷ் 3’ கடந்த 2013ஆம் ஆண்டு வெளியானது.

‘கிரிஷ் 3’ திரைப்படம் வெளியாகி இப்போது 10 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ரசிகர்கள் நான்காவது பாகமான ‘கிரிஷ் 4’ எப்போது வெளியாகும் என ஆர்வமாகக் கேள்விகள் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், ‘கிரிஷ் 4’ திரைப்படத்தை ஹிருத்திக் ரோஷனே நடித்து இயக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இதுவரை நடிகராக மட்டுமே இயங்கிய ஹிருத்திக் ரோஷன், தற்போது ‘கிரிஷ் 4’ மூலம் இயக்குநராக களமிறங்கவிருக்கிறார் என்பதால், இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது. மேலும், இதன் முந்தைய பாகங்களில் நடித்த பிரீத்தி ஜிந்தா, இந்த பாகத்திலும் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.