ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான ‘வேட்டையன்’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் பஹத் பாசில் நடித்திருந்தார். அவரின் வேடம் அந்த படத்தின் கதையை மிகச் சிறப்பாக கொண்டு சென்றது.

இந்நிலையில், ‘கூலி’ படத்திற்குப் பிறகு ரஜினி மீண்டும் நெல்சன் இயக்கும் ‘ஜெயிலர்-2’ படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தில், ‘ஜெயிலர்’ படத்தில் இருந்த ரம்யா கிருஷ்ணன் மற்றும் மிர்னா மேனன் தங்களுடைய முந்தைய கதாபாத்திரங்களில் மீண்டும் நடிக்கிறார்கள். அதே போன்று, முதல் பாகத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த சிவராஜ்குமார் மற்றும் மோகன்லாலும் இந்தத் தொடரிலும் நடிக்க உள்ளனர்.
இந்நிலையில், ‘வேட்டையன்’ படத்திற்குப் பிறகு பஹத் பாசில் ‘ஜெயிலர்-2’ படத்திலும் ரஜினியுடன் இணைந்துள்ளார். இந்தப் படத்தில் பஹத் பாசில் மற்றும் ரஜினியின் கதாபாத்திரங்கள் ஒன்றுக்கொன்று எதிரானவை என்று கூறப்படுகிறது.