சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது மிகப்பிரபலமான ‘பாட்ஷா’ மற்றும் ‘சந்திரமுகி’ படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்க மறுத்துவிட்டார். ஆனால், தற்போது நெல்சன் இயக்கிய ‘ஜெயிலர்’ படத்தின் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார்.
இதற்கு முக்கிய காரணம், நெல்சன் கூறிய கதை ரஜினியை மிகவும் கவர்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடங்க இருக்கிறது.
‘ஜெயிலர்’ முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் இந்த பாகத்திலும் நடிக்க உள்ளதாகத் தெரிகிறது. ஆனால், ‘ஜெயிலர்’ படத்தில் நடித்த கன்னட நடிகர் சிவராஜ்குமார் உடல்நலக் குறைவால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதால், அவருக்கு பதிலாக தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. நெல்சன், இதில் மட்டுமின்றி, பிற மொழி நடிகர்களையும் இப்படத்தில் இணைக்க திட்டமிட்டுள்ளாராம்.