Friday, January 10, 2025

‘மதகஜராஜா’ படத்தில் ஆர்யா நடித்துள்ளாரா? வெளியான சுவாரஸ்யமான அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2013ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில், விஷால் நடிப்பில் உருவான படம் “மத கஜ ராஜா”. ஜெமினி பிலிம்ஸ் தயாரித்த இந்த படம் பொருளாதார சிக்கல்களால் வெளியீடு பெறாமல் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் காலமாக கிடப்பில் இருந்தது. ஆனால் தற்போது ஜனவரி 12ஆம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அஞ்சலி மற்றும் வரலட்சுமி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

அப்போது முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த சந்தானம், “கலகலப்பு” மற்றும் “தீயா வேலை செய்யணும் குமாரு” படங்களுக்குப் பிறகு மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் இணைந்துள்ளார். மேலும், இந்த படத்தில் நடிகர் ஆர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக இயக்குநர் சுந்தர்.சி சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

2021ஆம் ஆண்டு வெளியான “அரண்மனை 3” படத்தில் ஆர்யா முதன்முறையாக சுந்தர்.சி இயக்கத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். ஆனால், 2012ஆம் ஆண்டிலேயே ஆர்யா, சுந்தர்.சி இயக்கத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.அதே வருடம் விஷாலும் ஆர்யாவும் இணைந்து நடித்த “அவன் இவன்” படம் வெளியானது. அந்த படத்தினை தொடர்ந்து, “மத கஜ ராஜா”வில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஆர்யாவை விஷால் அழைத்துவிட்டார் என்பது தெரிய வருகிறது. அதைப் போலவே, விஷால் மற்றும் சந்தானம் இணைந்து நடித்த “வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க” படத்திலும் ஆர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News