Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

அனுபமா பரமேஸ்வரனின் பர்தா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாரா? கசிந்த தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘பிரேமம்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்குள் அடியெடுத்தவர் அனுபமா பரமேஸ்வரன். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடிக்கத் தொடங்கினார். தமிழில் தனுஷ் உடன் “கொடி” படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில், “கார்த்திகேயா – 2”, “18 பேஜஸ்”, “டில்லு ஸ்கொயர்” போன்ற வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில், அஷ்வத் மாரிமுத்து இயக்கிய “டிராகன்” திரைப்படத்தில் கீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார்.

தற்போது, அனுபமா “பரதா” என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். விஜய் டான்கடா, ஸ்ரீனிவாசலு, ஸ்ரீதர் மகுவா ஆகியோர் இணைந்து ஆனந்தா மீடியா பேனரில் இப்படத்தை தயாரிக்கின்றனர். பிரவீன் கந்த்ரேகுலா இந்தப் படத்தினை இயக்குகிறார். சமீபத்தில் வெளியான டீசர், இரண்டு பெண்களுடன் பயணிக்கும் ஒரு கிராமத்து பெண்ணின் சாகச பயணத்தை மையமாகக் கொண்டு கதை நகருவதை காட்டியது. கிராமங்களில் பெண்கள் “பரதா” அணிவது, அவர்களை அடிமைகளாக சித்தரிக்க ஆண்கள் கொண்டு வந்த பழக்கமென்று கூறப்படுகிறது. பரதா திரைப்படமும், அந்த பழமைவாத சமூக அமைப்பினால் பாதிக்கப்படும் பெண்களின் நிலையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும். இதற்கிடையில், நடிகை சமந்தா இந்தப் படத்தில் கேமியோ ரோலில் (குறுங்காட்சியில்) நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே, அனுபமா மற்றும் சமந்தா இணைந்து நடித்த “அ ஆ” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News