கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படமானது மே 1ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு அடுத்ததாக, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்கிறார். அவருடன் சேர்ந்து சுவாசிகா, சிவதா, யோகி பாபு மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார்கள்.

இதற்குமுன், இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நோக்கி விரைந்து சென்று கொண்டிருக்கிறது என்பதும் வெளியாகியிருந்தது. இந்நிலையில், தற்போது மேலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகை அனகா ரவி இணைந்துள்ளார் என்பதும் தற்போது உறுதி செய்யப்பட்ட தகவலாகும்.
அனகா ரவி தற்போது மலையாள மொழியில் உருவாகியுள்ள ஆலப்புழா ஜிம்கானா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, இந்த தகவலை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.