2000ம் ஆண்டு, ராஜீவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி, அஜித் குமார், ஐஸ்வர்யா ராய் மற்றும் தபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’. இந்த படம் அந்த காலத்தில் ரசிகர்களிடம் இருந்து மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

குறிப்பாக, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும், இன்றைக்கும் ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்பைப் பெறுவது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பழைய திரைப்படங்களை மீண்டும் திரையில் வெளியிடும் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ திரைப்படத்தை வரும் மே 1ம் தேதி, அஜித் பிறந்த நாளில் திரையரங்குகளில் மீண்டும் வெளியிடும் நோக்கில், அதன் ரீமாஸ்டர் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன என தெரிவிக்கப்படுகிறது.