Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

நடிகை வனிதா விஜயகுமாருக்கு திருமணமா? இது ரியலா? அல்லது ரீலா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை வனிதா பல சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் கடந்து, பிஸியாக தற்போதைய பல படங்களில் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் வசந்தபாலன் இயக்கத்தில் அவர் நடித்த “அநீதி” படத்தில் அவருடைய நடிப்பு மிகவும் பேசப்பட்டு பரவலாக பாராட்டப்பட்டது. இந்நிலையில், கடற்கரை ஒன்றின் பின்னணியில் ராபர்ட் மாஸ்டரிடம் வனிதா தனது காதலை புரொபோஸ் செய்யும் போட்டோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த போட்டோவில் ‛Save the Date’ என்று குறிப்பிடப்பட்டு, அக்டோபர் 5ம் தேதி, ராபர்ட் மற்றும் வனிதா என்கிற பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த போட்டோ ஒரு திருமணக் கார்டு போல் இருப்பதால், இதனை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் வனிதாவின் திருமணத்தை பற்றிய செய்திகள் பரவத் தொடங்கியுள்ளன.

இதுகுறித்து சினிமா வட்டாரங்களில் இருந்து வெளிவந்த தகவலின்படி, இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடித்துள்ளனர், மற்றும் அதற்கான அறிவிப்பு அக்டோபர் 5ம் தேதி வெளியாகும். இதற்காகவே இந்த போட்டோவை வெளியிட்டு, அதை விளம்பரமாக உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

- Advertisement -

Read more

Local News