Touring Talkies
100% Cinema

Thursday, May 29, 2025

Touring Talkies

ராகவா லாரன்ஸின் ‘பென்ஸ்’திரைப்படத்தில் நடிக்கிறாரா நடிகை சம்யுக்தா மேனன்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குகிறார் ராகவா லாரன்ஸ். தற்போது, லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் ‘பென்ஸ்’ என்ற புதிய திரைப்படத்தில் அவர் நடித்துவருகிறார். இந்தப் படத்தை ‘ஜி ஸ்குவாட்’ என்ற தனது நிறுவனத்தின் மூலம் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கிறார். முன்னதாக ‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணியாற்றுகிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதற்கு முன் வெளியான ‘விக்ரம்’, ‘கைதி’, ‘லியோ’ போன்ற திரைப்படங்கள் போலவே, ‘பென்ஸ்’ படமும் லோகேஷ் உருவாக்கிய ‘சினிமாடிக் யூனிவர்ஸ்’ என்று அழைக்கப்படும் எல்.சி.யூ-வின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. இதனால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தின் பூஜை முறையாக நடைபெற்றது. அதன் தொடர்பான புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்தப் படத்தில் இரு கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனுஷ் நடித்த ‘வாத்தி’ திரைப்படத்தில் நாயகியாக நடித்த பிரபல நடிகை சம்யுக்தா மேனன், இப்போது ‘பென்ஸ்’ படத்திலும் இணைந்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News