‘அமரன்’ படத்திற்குப் பிறகு ஹிந்தியில் ‘ஏக் தின்’ திரைப்படத்தில் நடித்த சாய் பல்லவி, தற்போது ‘ராமாயணா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் சீதை வேடத்தில் நடித்துவருகிறார். இதனிடையே, பிரபாஸின் ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் சாய் பல்லவி நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

முதல் பாகத்தில் நடித்திருந்த தீபிகா படுகோனே அந்தத் திட்டத்திலிருந்து விலகியுள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.
தற்போது, அவருக்கு பதிலாக சாய் பல்லவியை நடிக்க வைக்க இயக்குநர் நாக் அஸ்வின் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என கூறப்படுகிறது. முதலில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அடுத்த ஆண்டு தொடங்கும் வாய்ப்புகள் அதிகம் என தகவல் வெளியாகியுள்ளது.