Touring Talkies
100% Cinema

Wednesday, March 26, 2025

Touring Talkies

தெலுங்கு பிரபலத்தை காதலிக்கிறாரா நடிகை ரிது வர்மா? தீயாய் பரவும் தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கில் 2013-ம் ஆண்டு வெளியான ‘பாட்ஷா’ திரைப்படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார் நடிகை ரிது வர்மா. இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். தமிழில், ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘நித்தம் ஒரு வானம்’, ‘மார்க் ஆண்டனி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரமுடன் ‘துருவநட்சத்திரம்’ படத்திலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் மசாக்கா என்ற படம் வெளியானது. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதற்கிடையில், நடிகை ரிது வர்மா பிரபல தெலுங்கு நடிகரான வைஷ்ணவ் தேஜ் என்பவரை காதலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் நடிகர் சிரஞ்சீவி குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். வைஷ்ணவ் தேஜ் ‘உபென்னா’ என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களாக இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகை ரிது வர்மா, வைஷ்ணவ் தேஜை விட 5 வயது மூத்தவர் ஆவார்.

- Advertisement -

Read more

Local News