Touring Talkies
100% Cinema

Thursday, September 18, 2025

Touring Talkies

ஹிருதிக் ரோஷனின் கிரிஷ் 4 பாகத்தில் இணைகிறாரா நடிகை ராஷ்மிகா மந்தனா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் ஹிருதிக் ரோஷன். இவரது தந்தை ராகேஷ் ரோஷன் இயக்கத்தில், 2006 ஆம் ஆண்டில் ஹிருதிக் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியை பெற்ற படம் கிரிஷ். அதன் தொடர்ச்சியாக கிரிஷ் 2, கிரிஷ் 3 ஆகிய பாகங்களும் ராகேஷ் ரோஷன் மற்றும் ஹிருதிக் ரோஷன் கூட்டணியில் வெளிவந்து வெற்றியடைந்தன.

சமீபத்தில், கிரிஷ் 4 பாகத்தை ஹிருதிக் ரோஷன் இயக்குவதுடன், கதாநாயகனாகவும் அவர் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தை ஆதித்யா சோப்ரா மற்றும் ராகேஷ் ரோஷன் இணைந்து தயாரிக்கின்றனர்.

முன்னதாக வந்த கிரிஷ் படங்களில் பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக தொடர்ந்து நடித்திருந்தார். ஆனால் தற்போது, கிரிஷ் 4 பாகத்தில் இரண்டாவது நாயகியாக ராஷ்மிகா மந்தனாவை நடிக்க வைக்கும் நோக்கில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என பாலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

Read more

Local News