‘குபேரா’ படத்தை தொடர்ந்து, தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ படமும், ஹிந்தியில் நடித்துள்ள ‘தேரே இஸ்க் மெயின்’ என்ற படமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, ‘போர் தொழில்’ பட இயக்குநரான விக்னேஷ் ராஜா இயக்கும் புதிய தமிழ்ப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்துக்கு ‘அறுவடை’ என்ற பெயர் வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனை வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் ஷூட்டிங் ஜூலை 15ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
பூஜா ஹெக்டே தமிழில் ஜீவாவுடன் ‘முகமூடி’, விஜய்யுடன் ‘பீஸ்ட்’, சூர்யாவுடன் ‘ரெட்ரோ’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் இந்தப் படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை மமிதா பைஜூ நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார் எனவும் விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.