நடிகர் தனுஷ் தற்போது ‛போர் தொழில்’ பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனது 54வது திரைப்படத்தில் நடிக்கிறார். மேலும், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷின் 55வது திரைப்படம் உருவாகவுள்ளது. இந்தப் படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக முன்பே அறிவிக்கப்பட்டது.

இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், படத்தில் கதாநாயகியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கவிருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மீனாட்சி சவுத்ரி தற்போது தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிசியான நடிகையாக வலம்வரும் நிலையில், முன்னதாக தமிழில் ‛சிங்கப்பூர் சலூன்’ மற்றும் ‛தி கோட்’ போன்ற படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
–