தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி சமீபத்தில் “விஸ்வம்பரா” படத்தில் நடித்துள்ளார், இதில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். அதன் பின் அனில் ரவிபுடி இயக்கத்தில் நயன்தாராவுடன் இணைந்து “மனசங்கர வரபிரசாத் காரு” படத்தில் நடித்துவருகிறார். இத்திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையில் வெளியாக உள்ளது.

இதையடுத்து “வால்டர் வீரய்யா” படத்தை இயக்கிய பாபியுடன் சிரஞ்சீவி மீண்டும் கைகோர்க்க உள்ளார். இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது.
மாளவிகா கடைசியாக மலையாளத்தில் மோகன்லாலுடன் “ஹிருதயபூர்வம்” திரைப்படத்தில் நடித்திருந்தார். தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் அவர் ஜோடி சேரவிருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.