கீர்த்தி சுரேஷ் கடைசியாக தமிழில் நடிப்பில் “ரகு தாத்தா” படம் வெளியானது. அதன் பிறகு, அவர் ஹிந்தியில் நடித்த முதல் திரைப்படமான “பேபி ஜான்” வெளியானது. “தெறி” படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் கொஞ்சம் கிளாமரான ஹீரோயினாக தோன்றினார் கீர்த்தி சுரேஷ்.

இதனைத் தொடர்ந்து அவரது திருமணம் நடந்த பிறகு, இன்னும் எந்த புதிய படங்களிலும் கமிட் ஆகவில்லையாம். தற்போது, அவர் “அக்கா” என்ற ஒரு நெட்பிளிக்ஸ் வெப் சீரிஸில் நடித்துள்ளார். வரலாற்று கதையம்சம் கொண்ட இந்த வெப் சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியானது.
இந்தநிலையில், அடுத்ததாக ஹிந்தியில் இருந்து ஒரு ரொமாண்டிக் காமெடி திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான பேச்சுவார்த்தையில் கீர்த்தி சுரேஷ் ஈடுபட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது.