தமிழ் திரைப்பட உலகின் முக்கிய நடிகர்களில் ஒருவராக விளங்கும் சிம்பு, தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள “தக் லைப்” திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு, அவர் நடிக்கும் மூன்று புதிய திரைப்படங்களின் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த அறிவிப்புகளின் படி, அடுத்ததாக சிம்பு ‘பார்க்கிங்’ திரைப்படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ‘எஸ்டிஆர் – 49’ படத்திலும், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ‘எஸ்டிஆர் – 50’ படத்திலும் நடித்திருக்கிறார்.

‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘டிராகன்’ ஆகிய படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து, ‘எஸ்டிஆர் – 51’ திரைப்படத்தையும் இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிக்க சிம்பு ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையில், ‘எஸ்டிஆர் – 49’ படத்தில் சிம்புவின் ஜோடியாக ‘டிராகன்’ பட நடிகை கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து சந்தானம் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்க இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு துபாயில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘டிராகன்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான கயாடு லோஹர், தற்போது அதர்வாவுடன் ‘இதயம் முரளி’ படத்தில் நடித்து வருவதுடன், மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.