பிரபல ஸ்டன்ட் மாஸ்டர்களான அன்பு-அறிவு இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கவுள்ளார். இது அவரது 237வது திரைப்படமாகும், இப்படம் ஆக்ஷன் கதையை மையமாகக் கொண்டு உருவாகிறது. இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் தொடக்க வேலைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.

தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம், இந்தக் கமல்ஹாசனின் 237வது படத்தில் மலையாள நடிகையான கல்யாணி பிரியதர்ஷன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு முன், கல்யாணி பிரியதர்ஷன் தமிழில் சிவகார்த்திகேயனுடன் ‘ஹீரோ’ மற்றும் சிம்புவிற் மாநாடு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், அவர் ரவி மோகனுடன் இணைந்து ‘ஜீனி’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.