‘உப்பேனா’ திரைப்படத்தை இயக்கிய புஞ்சிபாபு சனா தற்போது நடிகர் ராம்சரணின் 16வது படமாக உருவாகும் ‘பெத்தி’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். மேலும் சிவராஜ் குமார் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படம் எதிர்வரும் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது, இப்படத்தில் இடம்பெறவுள்ள ஒரு சிறப்பு பாடலுக்காக நடிகை காஜல் அகர்வாலுடன் நடனமாட பேசப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு மேலாக, காஜல் அகர்வால் ஏற்கனவே ராம்சரணுடன் இரு படங்களில் ஜோடியாக நடித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.