நாகார்ஜுனா தற்போது தனது 100வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழ் இயக்குனர் ரா. கார்த்திக் இந்த படத்தை இயக்க உள்ளார். இது ஒரு அரசியல் திரில்லர் படம் என்று கூறப்படுகிறது. தபு ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பார் என்று முன்னதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், சமீபத்திய தகவல்களின்படி, அனுஷ்கா ஷெட்டி இப்படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் நாகார்ஜுனா இரட்டை வேடங்களில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்த 100வது என்ற மைல்கல் படத்தை அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ளது. இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.