வினோத் இயக்கத்தில் விஜய், தனது 69வது படத்தை கடைசி படமாக அறிவித்து நடித்து வருகிறார். இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கவுதம் மேனன், பிரகாஷ் ராஜ், வரலட்சுமி, டிஜே அருணாசலம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தை கே.வி.என் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது, அனிரூத் இசையமைக்கிறார். அரசியல் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகி வருகிறது.
படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் அமைக்கப்பட்ட செட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விருமாண்டி படத்தின் நடிகை அபிராமி இப்படத்தில் இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படங்களில் பிஸியாக நடிக்க தொடங்கியுள்ள அவர், கடந்த ஆண்டில் மகாராஜா மற்றும் வேட்டையன் உள்ளிட்ட படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.