தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தற்போது தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனது 46வது படத்தில் நடித்து வருகிறார்.

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து முடித்துள்ள ‘கருப்பு’ படத்தின் ரிலீஸ் தேதி எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இதனிடையே, சூர்யா அடுத்ததாக ஒரு தெலுங்கு இயக்குனரிடம் கைக்கோர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் ‘ப்ரோசெவருவருரா, அண்டே சுந்தரன்கி, சரிபொத்த சனிவாரம்’ ஆகிய படங்களை இயக்கியுள்ள விவேக் ஆத்ரேயா சமீபத்தில் சூர்யாவைச் சந்தித்து கதை சொன்னதாகவும் சூர்யாவுக்கு அந்தக் கதை பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது . இதுகுறித்து மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

