நடிகர் சிலம்பரசன் தற்போது தனது 49வது படத்தில் “பார்க்கிங்” பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துபாயில் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அந்த படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் லீக் ஆகி வைரலாகின.

இதில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய பிறகு, அவர் பிற நடிகர்களின் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
சந்தானம் இவ்வாறு தனது பாதையை மாற்றிக்கொண்டதற்குக் காரணம் “மதகஜராஜா” படத்தின் வெற்றி என்று கூறப்படுகிறது. தற்போது, அவர் “டிடி நெக்ஸ்ட் லெவல்” என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார், மேலும் விரைவில் அது திரைக்கு வர உள்ளது.