தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜூவின் தயாரிப்பில், ‘வாரிசு’ மற்றும் ‘மகரிஷி’ போன்ற படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி, ஹிந்தி நடிகர் அமீர்கான் நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருந்தார். ஆனால் சில காரணங்களால் அந்த திட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளது என்ற தகவல் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்தது.

இதனைத் தொடர்ந்து, அதே கதையை அமீர்கானுக்கு பதிலாக தெலுங்கு நடிகரும், துணை முதல்வருமான பவன் கல்யாணை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை தில் ராஜூ தொடங்கியுள்ளதாக கூறப்பட்டது.
இதற்கிடையில், வம்சி பைடிப்பள்ளி மற்றும் தில் ராஜூ இருவரும் மும்பையில் நடிகர் சல்மான் கானை சந்தித்து அந்தக் கதையை பற்றி விவாதித்ததாகவும், அந்தக் கதை சல்மான் கானுக்கு மிகவும் பிடித்ததாகவும், அதில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் பாலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

